ஷாருக்கான் யாருன்னே தெரியாது; அவர்தான் ஸ்பெஷல் - பட் கமின்ஸ்

Sumathi
in கிரிக்கெட்Report this article
ஷாருக்கானை தனக்கு தெரியவில்லை என பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் அணி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பட் கமின்ஸ் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வென்றார்.
அதன் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஹைதராபாத் அணியின் கேப்டனாக 20.50 கோடிக்கு வாங்கப்பட்டார். அதன்படி, ஹைதராபாத் அணி ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். ஆனால், ஃபைனலில் கொல்கத்தா அணியிடம் ஹைதராபாத் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் கமின்ஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “இப்படி சொல்வது எனக்கு சிரமத்தை கொடுக்கலாம். ஆனால் ஷாருக்கான் முதல் முறையாக பார்த்த போது அவர் யார் என்ற ஐடியா எனக்கு இல்லை. அந்த சமயத்தில் 18 – 19 வயதில் இருந்த நான் பாலிவுட் படங்களை பார்த்ததில்லை.
கமின்ஸ் பேட்டி
அந்த சூழ்நிலையில் நேரில் பார்த்த போது அவர் நட்சத்திரம் என்று என்னிடம் சொன்னார்கள். அவரைச் சுற்றி பாதுகாவலர்கள் இருந்தார்கள். மற்ற இளம் இந்திய வீரர்கள் அவரிடம் பேசுவதற்கு தயங்கினார்கள். அதனால் அவர் ஸ்பெஷல் மிகுந்தவராக இருப்பார் என்று நான் நினைத்தேன்.
ஒரு அணியின் கேப்டனாக இவரை விட சிறந்த உரிமையாளரை நீங்கள் கேட்க முடியாது. ஏனெனில் அவர் வீரர்களான எங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் சுந்தரமாக விளையாடுங்கள் என்றே சொல்வார். ஆனால் மற்ற ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை போடுவார்கள்.
ஆனால் ஷாருக்கான் அணி மற்றும் வீரர்களிடமிருந்து அழுத்தத்தை எடுக்க முயற்சிப்பது சிறந்த விஷயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.