தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...!
Tamil nadu
Narendra Modi
By Nandhini
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார்.
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா வரும் அக்.28ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வரும் அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.