தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை - உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்
Ramanathapuram
M. K. Stalin
U. Muthuramalingam Thevar
By Anupriyamkumaresan
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாள் மற்றும் அவரது 59வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மேலும் இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்துச் சிறப்பித்து வருகின்றனர்.