ACபஸ்-க்கு ஆசை பட்டது ஒரு குத்தமா ? - காற்று பிடிக்க காசு இல்லாததால் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

chennai tamilnadu acbus
By Irumporai Mar 09, 2022 07:50 AM GMT
Report

விசில் சத்தமும் குயில்பாட்டு, உன்னோடுசெல்கையிலே இளையராஜாவின் இசைஇன்னும் ஒருதுளி இனிக்கும் ஆம் இவ்வாறு அழகமான அனுபத்தை கொடுப்பது பேருந்து பயணம் .ஆம் , பேருந்து பயணங்கள் மிக அலாதியானவை. அதுவும் நெடுந்தூர ஜன்னலோர பயணங்கள் மனதுக்கு மிக நெருக்கமானவை. அப்பயணங்கள் நம் சிறு வயது ஞாபகங்களை ரீவைண்ட் செய்யும் பெரும்பாலும் நாம் வெளியூர் செல்லவேண்டும் என்றால் சொகுசு பேருந்தில் அமர்ந்து ரிலாக்ஸாக செல்லுவோம் ,

இந்த நிலையில் காற்று பிடிக்க காசு இல்லாததால் பாதியில் பயணிகளை இறக்கிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது .சொகுசு பயணத்தை விரும்பியவர்கள் சந்தித்த பரிதாப நிலையினை விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து ஏ.எம்.ஆர். என்ற நாகலாந்து மாநில பதிவு எண் கொண்ட ஒரு தனியார் சொகுசு பேருந்து 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தது

.இந்த பேருந்து புறப்பட்டதிலிருந்து டயரில் காற்று இல்லாததால் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுத்தி நிறுத்தி காற்று பிடிக்கப்பட்டு வந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே வரும் பொழுது பேருந்தின் ஓட்டுனரிடம் காற்று பிடிக்கக் கூட காசு இல்லாததால் காற்று இல்லாமல் பேருந்தை ஓட்டி வந்துள்ளார் .

இதனால் உளுந்தூர்பேட்டை அடுத்த எடைக்கல் பகுதியில் வரும்போது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது தொடர்ந்து பேருந்தை இயக்க முடியாததால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் பேருந்தின் உரிமையாளருக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் பல மணி நேரமாக எடுக்காததால் பயணிகளிடம் என்ன பதில் கூற வேண்டும் என்று தெரியாமல் தவித்தார்.

தொடர்ந்து பயணிகள் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு 1,050 ரூபாய் படுக்கை வசதி கொண்ட பயணிக்கும் 850 ரூபாய் அமர்ந்து செல்லும் பயணிக்கும் வசூல் செய்யப்பட்ட நிலையில் அந்த தொகையை திரும்ப கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர் .

மேலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து மாற்று பேருந்து ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் ஓட்டுனர் சண்முகத்தால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது பெரும்பாலான பயணிகள் தங்களது அவசர சூழலைக் கருத்தில் கொண்டு உளுந்தூர்பேட்டையில் இருந்து மாற்று பேருந்தில் சென்றுள்ளனர்.சுமார் 8 பயணிகள் தங்களிடம் மாற்று பேருந்தில் செல்ல பணம் இல்லாததால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

[

அதன்பேரில் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் பேருந்தின் ஓட்டுநர் சண்முகத்திடம் விசாரணை செய்து வந்த நிலையில் பேருந்து உரிமையாளர் பணம் அனுப்பிய பிறகு இங்கு இருக்கக்கூடிய பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுப்பதாக கூறினார்.

சொகுசு பயணத்திற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏசி படுக்கை வசதி ஆகியவற்றை அனுபவிப்பதற்கு முன்பதிவு செய்த பயணிகள் சொகுசுப் பேருந்தில் ஓட்டுனரிடம் காற்று பிடிக்க கூட காசு இல்லாததால் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டதால் ஏம்பா சொகுசு பஸ்க்கு ஆசபட்டது ஒரு குத்தமா பா என புலம்பி உள்ளனர் பயணிகள்.