என்னது மறுபடியுமா ? - நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி : நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது.
விமான கதவை திறக்க முயற்சி
விமானம் மும்பை விமான நிலையம் அருகே வந்த போது பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்திருக்கிறார். அந்த அவசரகால கதவு கவர் கொண்டு மூடப்பட்டிருக்கிறது.

ஆனபோதிலும் அந்த கவரை விலக்கி கதவை அந்த பயணி திறக்க முயற்சி செய்திருக்கிறார். இதனை பார்த்த விமான ஊழியர்கள் உடனடியாக கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். அவரின் செயலை உடனடியாக ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரையிறங்கியது.
திருச்சியில் நடந்த சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற நிகழ்வு அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஆபத்தை உணராமல் இப்படி பயணிகள் நடந்துக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே விமான இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை கர்நாடக பாஜக நிர்வாகி தேஜஸ்வி சூர்யா திறந்து பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.