பெண் பயணிக்கு வலிப்பு.., மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச்சென்ற ஓட்டுநர்
பேருந்தில் பெண் பயணிக்கு வலிப்பு ஏற்பட்டதால், பேருந்தை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்ற ஓட்டுநரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
பேருந்தில் வலிப்பு
சென்னையில் கிளாம்பாக்கம் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட தடம் எண் 91 மாநகரப் பேருந்து வழக்கம்போல் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்றது.
இந்தப் பேருந்தில் லக்ஷ்மனன் என்பவர் நடத்துனராகப் பணியில் இருந்தார்.

பேருந்து இரும்புலியூர் நிறுத்தத்தை அடைந்தபோது, அங்கு ஒரு பெண் பயணி பேருந்தில் ஏறியுள்ளார்.
பின் சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, பேருந்திலேயே மயங்கி விழுந்தார்.
ஓட்டுநரின் நற்செயல்
இதையடுத்து ஓட்டுநரும், நடத்துநரும் உடனடியாக முடிவு செய்து, பேருந்தை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றுப் பாதையில் வேகமாக ஓட்டிச்சென்றனர்.
மருத்துவமனையை அடைந்ததும், பயணிகளின் உதவியுடன் அந்தப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.