விழுப்புரம் அருகே சோக சம்பவம்.. பஸ்ஸில் பயணி தாக்கியதில் கண்டக்டர் பலி
விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பயணி தாக்கி நடத்துநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது மதுராந்தகத்தில் போதையில் ஏறிய பயணி ஒருவருக்கும், நடத்துநர் பெருமாளுக்கும் டிக்கெட் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைக்கலப்பில் முடிவடைய போதை பயணி தாக்கியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பெருமாள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதேசமயம் தப்பியோடிய பயணியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.