Video: டெல்லியில் புறப்பட தாமதமான விமானம் - ஆத்திரத்தில் பயணி செய்த காரியம்!
விமானம் புறப்படத் தாமதமானதால் பயணி ஒருவர் விமானியை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாமதம்
டெல்லியிலிருந்து கோவாவுக்கு செல்லும் இண்டிகோ விமானம் ஒன்று பனிமூட்டம் காரணமாக புறப்படத் தாமதமானது.

பல மணி நேரம் தாமதமானதால் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து குறித்து பயணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விமானியை, பயணி ஒருவர் வேகமாக வந்து தாக்கினார்.
விசாரணை
இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த பயணி விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் காவல்துறையில் புகாரளித்த நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. விமானி தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan