இந்தியா-நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடக்கம்
India
Bus
start
Nepal
Passenger
By Thahir
கொரோனாவுக்கு முன்பு, மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து நேபாளத்துக்கு பஸ் போக்குவரத்து இயங்கி வந்தது. கொரோனாவால் 1.5 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து, தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு பஸ் புறப்பட்டது.
45 இருக்கைகள் கொண்ட அந்த பஸ்சில் சில பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். டிக்கெட் கட்டணம் ரூ.1,500 ஆகும்.
சிலிகுரியில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு இந்த பஸ் புறப்படுகிறது.
2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே இதில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.