சென்னையில் விரைவில் பயணிகள் படகு போக்குவரத்து சேவை...!
சென்னை முதல் காரைக்கால் வரை படகு போக்குவரத்தை விரைவில் தொடங்க சென்னை துறைமுக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் வரை பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்கு சென்னை துறைமுகம் திட்டமிட்டு வருவதாகவும், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவைக்கான பணிகள் தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் சிறு துறைமுகங்கள் அதிகமுள்ளதால் இந்த படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேர் பயணம் செய்யவும், இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இதற்காக சென்னை–காரைக்கால் இடையே உள்ள சிறு துறைமுகங்களை அழகுபடுத்தும் பணியும், ஆழப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.