பார்வதி நாயருக்கு விரைவில் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா?
நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
பார்வதி நாயர்
கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பார்வதி நாயர், ஜெயம் ரவி நடித்த ’நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து என்னை அறிந்தால், உத்தமவில்லன், கோட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வைபவ் உடன் ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் நடிகை பார்வதி நாயருக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமண தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
நிச்சசயதார்த்த படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பார்வதி நாயருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.