யாருமே கண்டுக்கல.. அவர் மட்டும் தேடியே வந்துட்டாரு; இப்போ என் நிலைமை - சின்ன ப்ரியாமணி வேதனை!

Tamil Cinema
By Sumathi Oct 04, 2023 06:18 AM GMT
Report

குட்டி ப்ரியாமணியான கார்த்திகா தேவி தனது சூழ்நிலை குறித்து மனம் திறந்துள்ளார்.

கார்த்திகா தேவி

பருத்திவீரன் படத்தில் குட்டி ப்ரியாமணியாக நடித்தவர் கார்த்திகா தேவி. அதன்பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘‘4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்க ஊரில் சிலர் படத்தில் நடிப்பார்கள்.

யாருமே கண்டுக்கல.. அவர் மட்டும் தேடியே வந்துட்டாரு; இப்போ என் நிலைமை - சின்ன ப்ரியாமணி வேதனை! | Paruthiveeran Priyamani Karthigadevi Interview

அவர்கள் மூலமாக தான் எனக்கு அறிமுகம் கிடைத்தது. பள்ளியில் வைத்து என்னை உட்பட என் வயது சிறுமிகளை போட்டோ எடுத்தார்கள். அதின் என்னை தேர்வு செய்தார்கள். அறியாத வயசு பாடல், சின்ன வயது முத்தழகுக்கு எடுக்கப்பட்டது. எனக்காக இளையராஜா சார் பாடல் பாடியிருப்பார்.

உருக்கம் 

அப்போ எனக்கு அது ஒன்னும் தெரியல. நான் தேர்வானது என் அப்பாவுக்கே தெரியாது. அப்பாவுக்கு தெரிந்தால் விடமாட்டார் என்பதால், அவரிடம் கூறவில்லை. சொல்லாம கூட வந்துட்ட என்று கோபப்பட்டார். ஆனாலும், அவருக்கும் நான் நடிப்பது பெருமை தானே, என்று ஏற்றுக்கொண்டார். பணம் இல்லாததால், வீட்டு பக்கத்தில் உள்ள சிலிண்டர் கம்பெனியில் 5 ஆண்டுகள் வேலை பார்த்தோம்.அப்பா உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

யாருமே கண்டுக்கல.. அவர் மட்டும் தேடியே வந்துட்டாரு; இப்போ என் நிலைமை - சின்ன ப்ரியாமணி வேதனை! | Paruthiveeran Priyamani Karthigadevi Interview

அதன் பிறகு அத்தை வந்து, அவருடைய மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தார். நானும் அக்காவும் ஒரே வீட்டில் தான் திருமணம் செய்திருக்கிறோம். ஆடு, மாடு மேய்ப்பதை என் கணவர் பார்த்துக் கொள்வார். மளிகை கடை ஒன்று வைத்திருக்கிறோம். நான் அதை பார்த்துக் கொள்கிறேன். விஜய் டிவியில் சீரியலுக்கு வந்து கேட்டார்கள். சென்னை போக வேண்டும் என்பதற்காக என்னால் அதில் நடிக்க முடியவில்லை.

நான் கஷ்டத்தில் இருந்த போது, பருத்திவீரன் படத்திற்கு நடிக்க அழைத்துச் சென்றவர்கள், அவர்களிடம் என் நிலையைை சொல்லியிருக்கிறார். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.