‘’ இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு ‘’ : பிரதமர் போரிஸ் ஜான்சான் பதவிக்கு ஆப்பா? நடந்தது என்ன?

pm borisjohnson pressure resign partygate
6 மாதங்கள் முன்

இங்கிலாந் இளவ்ரசர் பிலிப் மரணத்தின் போதும்  கொரோனா ஊரடங்கின் போதும்  பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது ஊழியர்கள்  மது விருந்தில்  பங்கேற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப் (99) காலமானதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அவரின் உயிர் பிரிந்தது.

அது இங்கிலாந்தில் கொரோனா பரவல் உச்சம் இருந்த காலகட்டம். இங்கிலாந்து மக்களின் உணர்வுகளில் அரச குடும்பத்திற்கு எப்போதுமே முக்கிய பங்குண்டு. அரச குடும்பத்திற்கு எப்போதுமே தனி மரியாதை கொடுப்பார்கள். அரசு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் இளவரசர் பிலிப். 

‘’ இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு ‘’   : பிரதமர் போரிஸ் ஜான்சான் பதவிக்கு ஆப்பா?  நடந்தது என்ன? | Partygate Pressure Uk Pm Boris Johnson To Resign

இந்த நிலையில் இளவரசர் பிலிப் மறைவுக்கு துக்கம் அனுசரிக்க முடியாமல் மக்கள் அனைவரும் முழு ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கியிருந்த வேளையில் போரிஸ் ஜான்சன், அவரது அலுவலக பணியாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சியில் (மது பார்ட்டி) கலந்துகொண்டிருக்கிறார்.

குறிப்பாக எந்த தடுப்பு விதிமுறைகளையும் அவர் கடைப்பிடிக்கவில்லை. இதனை தக்க ஆதாரத்துடன் The Daily Telegraph என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இதுதான் அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பிலிப்பின் இறுதிச் சடங்கு நடைபெற சில மணி நேரம் முன்பு இந்த பார்ட்டி நடைபெற்றது தான் அந்நாட்டு மக்களை ஆவேசமாக்கியுள்ளது.

இதனை ஒப்புக்கொண்ட போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே பகீரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதேபோல பிரதமர் அலுவலகமும் எலிசபெத் மகாராணியிடம் ஃபர்சனலாக மன்னிப்பு கோரியுள்ளது.

ஆனாலும் அவரை மக்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஆளும் தரப்பிலிருந்தே போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கலகக்குரல் எழுந்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.