அமமுக கட்சியைப் பற்றி இழிவாகப் பேசிய குருமூர்த்தி
சசிகலா குறித்து சர்ச்சைப் பேச்சுக்கு குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு துக்ளக் இதழின் 51ம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சசிகலாவை அதிமுக தனது கட்சியில் சேர்த்துக் கொள்வது நல்லது என தெரிவித்தார். மேலும் அமமுக கட்சியினை சாக்கடை எனவும் அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சின்போது, சசிகலா மற்றும் அ.ம.மு.கவை சாக்கடை நீருடன் குருமூர்த்தி ஒப்பிட்டது பரபரப்பை ஏற்பட்டது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள், சசிகலாவை குருமூர்த்தி ஆதரிப்பதாகக் கூறின. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் குருமூர்த்தி, "இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென தனது வாசகர்களிடம் சொல்ல துக்ளக் முடிவெடுத்து விட்டது.
அப்படி முடிவெடுத்த பிறகு நாங்கள் சாக்கடை என கருதுபவர்கள் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குள் வந்தால், அந்தக் கூட்டணியை ஆதரிக்க மாட்டோம் எனச் சொல்ல முடியாது. அதனால்தான் சந்திராசாமி உதாரணத்தைக் கூறினேன்.
அதை வைத்துக்கொண்டு, நான் இன்னும் மாஃபியா எனக் கருதும் அ.ம.மு.கவை ஆதரிப்பதாகச் எப்படி சொல்ல முடியும்? என அவர் தெரிவித்தார்.