அதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் இணைந்தன - சூடு பிடிக்கும் தேர்தல்களம்!

election party aiadmk
By Jon Mar 07, 2021 11:47 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் அதிமுகவில் இந்து மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி ,பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக தகவல் அறிவித்துள்ளன.

நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த கட்சிகள் அதிமுகவில் சேர்ந்து வெற்றி பெற்று தருவோம் என்றும் உறுதி அளித்திருக்கின்றன.


Gallery