மக்களைப் பற்றிக் கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான் - முக ஸ்டாலின் பேச்சு

people party dmk stalin
By Jon Mar 18, 2021 12:30 PM GMT
Report

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொரோனா மீண்டும் பரவி வரும் சூழலில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டுள்ளார். வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன் மற்றும் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் ஆகியோரை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.