No caste No religion: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பார்த்திபன்
வீடியோ வெளியிட்ட பார்த்திபன்
பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் சாதியை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையானது.
இதுதொடர்பாக வீடியோ மற்றும் அறிக்கை மூலம் மன்னிப்பு கோரிய நிலையில் மீண்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், இத்தனை வருடங்களில் நான் என் பிறப்பு பற்றி பெருமையாக நினைத்தது கிடையாது, அதை நான் வெறுப்பவன், எல்லா படங்களிலும் சாதி தேவையில்லை என்பதை பேசி இருக்கிறேன்.

நான் தமிழ்படத்தில் நடிக்கிறேன் என சொன்ன போதுகூட ”சரியாக கற்றுக்கொள்” என்று தான் என் தந்தை கூறினார், இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் சாதி பெருமை பேசுகிறாரே என்கிறார்கள்.
நாயுடு பையனா?
என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் எனக்கு தெலுங்கு சரியாக பேச வராது என கூறித்தான் பேச்சை தொடங்கினேன், என் பின்னால் இருந்தவர் நாயுடு பையனா என கேட்டார், ஆம் என கூறினேன்.
இதனால் மேடையில் நாயுடு என இருமுறை வந்துவிட்டது, இதற்கு எதிர்வினை இப்படி வரும் என நினைக்கவில்லை, சாதி வெறி இருந்தால் அப்படியே இருந்திருப்பேன், ஆனால் நான் அப்படியில்லை என்பதால் எனக்கு உறுத்தலாக இருந்தது.

No caste No religion
கடைசியாக என்னுடைய பிறப்பு சான்றிதழை மாற்ற முடியுமா? எனக் கேட்டேன், 2022ல் கூட ஒரு ஜோடி தங்கள் குழந்தைக்கு சாதியில்லை என்ற சான்றிதழை பெற்றுள்ளனர்.
அரசு அலுவலகத்துக்கு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்யச்சொன்னார்கள், எந்த சொந்த விருப்பத்தால் சாதி மத அடையாளத்தை முற்றிலுமாக துறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளேன்.
அரசாங்க பதிவுகளில் “சாதி இல்லை – மதம் இல்லை” (No caste No religion) என்று பதிவு செய்யவுள்ளேன்.
இச்சான்றிதழ் வந்தால் திரைத்துறையில் பெற்ற முதல் ஆளாக நான் இருப்பேன், இதுதான் எனக்கு பெருமை என தெரிவித்துள்ளார்.
