எல்லாம் விஜய் ரசிகர்கள் தான்... த்ரிஷா விவகாரத்தில் மீண்டும் பார்த்திபன்

Parthiban Trisha
By Fathima Mar 09, 2026 06:01 AM GMT
Report

சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபனிடம், த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்திற்கான புகைப்படம் காட்டப்பட்டது.

அதை பார்த்தவுடன், குந்தவை சில நாட்கள் வீட்டிற்குள் குந்த வைத்தால் நல்லது என பேசியிருந்தார்.

எல்லாம் விஜய் ரசிகர்கள் தான்... த்ரிஷா விவகாரத்தில் மீண்டும் பார்த்திபன் | Partiban Clarifies About Trisha Issue

இந்த காட்சிகள் வைரலாக பலரும் ஆதரவு தெரிவித்தனர், இதனால் கோபமடைந்த த்ரிஷா, பார்த்திபன் பெயரை குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள பார்த்திபன், விருது விழா மேடையில் யோசிக்காமல் டக்கென்று பதில் சொல்ல வேண்டும், த்ரிஷா புகைப்படத்தை காட்டியதும் குந்தவை குந்தவை என்று குரல் எழுப்ப வார்த்தை ஜாலத்திற்காக மட்டுமே பிரச்சனை வராமல் இருக்க குந்தவை வீட்டிலேயே குந்த வைக்கவும் என்று தெரிவித்ததும் அரங்கமே கை தட்டியது.

எல்லாம் விஜய் ரசிகர்கள் தான்... த்ரிஷா விவகாரத்தில் மீண்டும் பார்த்திபன் | Partiban Clarifies About Trisha Issue

அதில் பெரும்பாலானவர்கள் விஜய் ரசிகர்கள், இதை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டேன், ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வீடியோவை வெளியிட்டுள்ளனர், அது சிலருக்கு வருத்தம் அளிக்கிறது.

மனதில் பட்டதை தெரிவிக்க உள்குத்து இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது, அனைவரும் ஆண், பெண் என்கிற பாகுபாடு இல்லாமல் தேவை இல்லாத கட்டுப்பாடுகளை விவாகரத்து செய்துவிட்டு சுதந்திரத்தை கை பிடித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைக்கிறவன் நான் என பதிலளித்துள்ளார்.