பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள்
                    
                national
            
                    
                award
            
                    
                Oththa Seruppu
            
                    
                parthiepan
            
            
        
            
                
                By Jon
            
            
                
                
            
        
    பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், பார்த்திபன் இயக்கி, நடித்த ’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தேசிய விருது மற்றும் ஒலிப்பதிவு பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலிப்பதிவு பிரிவில் ரசூல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்படத்தை இயக்கி நடித்த பார்த்திபனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.