இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்தார் பார்த்திபன்

rahman movie music Parthiepan
By Kanagasooriyam Apr 11, 2021 05:39 PM GMT
Report

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இயக்குனர் பார்த்திபன் கூட்டணி அமைத்துள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.

இவர் சமீபத்தில் கடந்த 2019ல் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. இந்த நிலையில் பார்த்திபன் அவர்கள் இரவின் நிழல் என்ற சிங்கிள் ஷாட் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் ஏற்கனவே 3 பாடல்களை இசை அமைத்து கொடுத்துள்ளதாகவும் பார்த்திபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.