குந்தவையை வீட்டிலேயே... த்ரிஷா குறித்து பேசிய பிரபல நடிகர்
குந்தவையை இப்போதைக்கு வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது என நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.
தவெக தலைவரான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்வில், விஜய் த்ரிஷாவுடன் பங்குபெற்றது சர்ச்சையை கிளப்பியது.

விஜய்யின் செயலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கமெண்டுகள் பதிவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபனிடம், கேள்விகள் கேட்கப்பட்டது.
த்ரிஷாவின் பொன்னியின் செல்வன் குந்தவை புகைப்படத்தை காட்டிய போது, குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.
நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருக்கும். எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. அதனால் சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
பார்த்திபனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
