கண்டுக்காத நயன்...முதல் படத்திலேயே துரத்தி விட்ட பார்த்திபன்...அப்போ ஐயா முதல் படம் இல்லையா.?
தான் இயக்கிய குடைக்குள் மழை படத்திற்கு நடிகை நயன்தாராவை வேண்டாமென்று கூறியதாக பார்த்திபன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா
கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக வளம் வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. அதனை தொடர்நது அவர் தன்னுடைய 75 படத்தில் நடிக்கவுள்ளார். பாலிவுட் திரையுலகில் அவர் அறிமுகமாகும் நிலையில், அங்கும் சில ஆண்டுகள் பிஸியான நாயகியாக நயன்தாரா இருப்பார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் இயக்கிய குடைக்குள் மழை படத்தில் நயன்தாராவை வேண்டாமென கூறியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நயனை வேண்டாம் என்றேன்
சரத்குமார் நடிப்பில் வெளியான "ஐயா" படத்தின் மூலம் நயன்தாரா அறிமுகமாகியிருந்தாலும் அவர் அறிமுகமாகியிருக்க வேண்டிய படம் பார்த்திபன் இயக்கி நடித்த குடைக்குள் மழை தான். ஆனால் அந்த சமயத்தில் பார்த்திபன் நயன்தாராவை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
அதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன், "நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் இயக்கிய 'குடைக்குள் மழை' படத்தில் அவரை நடிக்க அழைத்ததாக குறிப்பிட்டார். ஆனால், அன்று நயன்தாரா வராமல் தனக்கு ஃபோன் செய்து 'தன்னால் நேற்று வர முடியவில்லை என்றும் நாளை காலை கண்டிப்பாக வந்துவிடுகிறேன்' என கூறிய போது, கோபத்தில் இருந்த தான் 'இல்லை வர வேண்டாம்' என சொல்லிவிட்டதாக பார்த்திபன் தெரிவித்தார்.