நரபலி..மனித தலையை வெட்டி பூஜை..! போலீசுக்கு சொல்றேன் - பார்த்திபன் ட்வீட் !!

Parthiban
By Karthick Dec 04, 2023 09:41 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் நரபலி கொடுக்கப்பட்டு பூஜை செய்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நரபலி

முந்தைய காலகட்டங்களில் நரபலி கொடுத்து பூஜை செய்யும் வழக்கம் இருந்ததாகவும், அது மனிதர்கள் நாகரீக வளர்ச்சி அடைந்தவுடன் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது வரை நம்பப்பட்டு வருகின்றது.

இருப்பினும் அவ்வப்போது இது போன்ற செயல்கள் நடப்பதாக செய்திகள் வெளிவரும் நிலையில், தற்போது பகிர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

parthiban-recent-tweet-abbout-narabali

இரண்டு இளைஞர்களின் தலையை கொய்து வைத்து அதற்க்கு ஒருவர் பூஜை செய்ய, சாமி ஆடுவது போல பெண் ஒருவர் உக்கிரமாக அந்த வீடியோவில் நின்றுள்ளார். இந்த வீடியோவை கண்ட பலரும் கொதித்துப்போயுள்ளனர்.

பார்த்திபன் ஆவேசம்

இந்த வீடியோ பெரும் வைரலான நிலையில் இந்த வீடியோவை கண்ட நடிகர் பார்த்திபன் கோபத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்.

நானும் போலீஸுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்". என கூறியுள்ளார்.