சேரி மக்கள் என்றாலே கெட்ட வார்த்தைதான்... சர்ச்சையில் சிக்கிய பவி டீச்சர் - மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!
சேரி மக்கள் என்றாலே கெட்ட வார்த்தைதான் பேசுவார்கள் என்று இரவின் நிழல் நடிகை பிரிகிடா பேசியது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
பிரிகிடா
ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடரில் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பிரிகிடா. இவர் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழலில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
முதலில் இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவிற்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இரவின் நிழல்
இப்படம் ரிலீசானது முதல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள பிரிகிடாவின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! https://t.co/NSq3LNaYt7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022
இது ஒருபுறம் இருக்க இவர் சேரி மக்கள் அப்படித்தான் என பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர் கூறியதாவது, இரவின் நிழல் படத்தின் கதையே தனிஒருவனை பற்றியது தான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டுமே தான் நடந்திருக்கிறது என்றால்,
எதிர்ப்பு
அதனை ராவாகத்தான் சொல்ல முடியும். உதாரணத்துக்கு ஒரு சேரி பகுதிக்கு போகிறோம் என்றால், அங்கு கெட்ட வார்த்தையை மட்டும் தான் கேட்க முடியும். சினிமாவுக்காக யாரும் ஏமாற்ற முடியாது” என பேசி இருந்தார்.
அவரின் இந்த பேச்சு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டுவிட்டர் வாயிலாக தனது பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டார் பிரிகிடா. இருந்தபோதும் அவரது பேச்சுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வந்ததால், தற்போது இயக்குனர் பார்த்திபனும் பிரிகிடாவிற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பார்த்திபன் மன்னிப்பு
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,
கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே! என குறிப்பிட்டுள்ளார்.