விவாகரத்திற்கு பின் மீண்டும் இணையும் பார்த்திபன் -சீதா; ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
புதிய பாதை படம் மூலம் பார்த்திபன் - சீதா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்த்திபன் - சீதா
நடிகை சீதா பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

அதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு 2010ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 2016ல் விவாகரத்தில் முடிந்தது.
புதிய பாதை
தொடர்ந்து, இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1989-ம் ஆண்டு வெளியான புதிய பாதைபடம் எனக்கு பெரிய திருப்புமுணையாக அமைந்தது. இந்த படத்தில் நடிக்கும்போது பார்த்திபனுடன் காதலும் மலர்ந்தது எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பார்த்திபன் ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற வித்தியாசமான படத்தை உருவாக்கி பாராட்டுகளை பெற்றார். தற்போது, தங்கர் பச்சன் இயக்கத்தில் நடித்த அழகி படம் ரிலீஸ் ஆனதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன்,
புதிய பாதை படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக கூறினார்.
எனவே, இவருக்கு ஜோடியாக மீண்டும் சீதா அந்த கேரக்டரில் இணைவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil