மனைவி பற்றி தப்பாவே பேசல.. ஓடிவந்த மகள் - மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!
பேட்டியால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து பார்த்திபன் பேசியுள்ளார்.
பார்த்திபன்
பார்த்திபன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் என்னுடைய காதலை உணர்ந்தது சீதாவிடம் தான். ஆரம்பத்தில் நான் மெச்சூரிட்டி இல்லாமல் எடுத்த முடிவால்தான் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.
கணவனோ மனைவியோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு சுயமரியாதை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது அளித்த பேட்டியில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
குழம்பிய குடும்பம்
ஒரு பேட்டியில் தன்னுடைய மனைவி குறித்து பேசி இருக்கிறார். அதுபோல இன்னொரு பேட்டியில் அவர் இயக்கிய சொர்ணமுகி படத்தை பற்றியும் பேசி இருக்கிறார். ஆனால் சேனல் ஒன்றில் இரண்டையும் ஒன்றாக்கி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த சீதா தன்னுடைய மகளிடம் வருத்தப்பட்டாராம்.
பார்த்திபனின் மகள் பார்த்திபனுக்கு மெசேஜ் செய்து என்னப்பா அம்மா பத்தி எதுவும் தப்பா பேசி இருக்கீங்களா? என்று கேட்க, இல்லம்மா நான் எதுவும் பேசல.
நான் பேசுனது அவங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தா சாரி சொல்லிரு. என்று சொல்லி நான் இரண்டு செய்தியில் பேசியதை ஒன்றாக சேர்த்து போட்டுட்டாங்க அவ்வளவுதான் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.