குந்தவை கருத்து சர்ச்சை.., விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட பார்த்திபன்

Vijay Trisha R. Parthiban
By Yashini Mar 10, 2026 09:54 AM GMT
Report

விருது விழாவில் இயக்குநர் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டபோது, மேடையில் சில நடிகர்களின் புகைப்படங்களை காட்டி உடனடியாக கருத்து சொல்லுமாறு கேட்டனர்.

அப்போது நடிகை திரிஷா புகைப்படத்தை காட்டி "குந்தவை பற்றி என்ன சொல்வீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது, "குந்தவை கொஞ்ச நாள் வீட்டிலேயே குந்த வைப்பது நல்லது" என்று பார்த்திபன் கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, "மைக்கில் பேசுவதால் அந்த கருத்து அறிவானதாகவோ, காமெடியாகவோ ஆகாது, அது முட்டாள்தனமாகவே இருக்கும்" என்றும் திரிஷா ட்வீட்டில் கூறினார்.

இதற்கு பதிலளித்து பார்த்திபன் த்ரிஷா ட்வீட் செய்வதற்கு முன்பே தாம் வருத்தம் தெரிவித்து ஆடியோ பதிவு செய்ததாகவும், ஆனால் அதற்குள் ட்வீட் வெளியானதாகவும் கூறினார்.

மேலும், தான் ஒன்றும் யார் மூலமாகவும் த்ரிஷாவின் புகைப்படத்தை மேடையில் காட்டச் சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும், மகளிர் தினத்தில் ஒரு பெண்ணை பற்றி இவ்வாறு பேசும் எண்ணமே இல்லை என்றும், பேச வேண்டுமெனில் வேலு நாச்சியார், அன்னை தெரசா மற்றும் டயானா போன்ற பெண்களைப் பற்றி பேச விரும்புவேன் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மூன்றாவது நபரை பற்றி பேசியதாகவும், அதற்காகவே வருத்தம் தெரிவித்ததாகவும் பார்த்திபன் விளக்கமளித்தார்.

ஆனால் த்ரிஷாவின் ட்வீட் தான் இந்த வீடியோவை வெளியிட காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் #WestandwithParthiban என்ற ஹாஷ்டேக் மூலம் பலரும் தன்னை ஆதரித்து வருவதாகவும், அந்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.