சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்து சிக்கிய காங்கிரஸ் உறுப்பினர்
கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையினை கிளப்பியுள்ளது.
கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் அவர் மொபைலில் ஆபாச வீடியோ பார்த்த வீடியோ தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரகாஷின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தான் பொதுவாக அவைக்குள் மொபைல் எடுத்துச் செல்ல மாட்டேன் எனவும் விவாதங்களில் கேள்விகள் எழுப்புவதற்காக மட்டுமே மொபைல் எடுத்துச் செல்வேன் என கூறினார்.
மேலும், தனது மொபைலில் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டதால், தேவையற்ற காணொலிகளை தான் நீக்கியதாகவும் தனக்கு ஆபாசம் படம் பார்க்கும் ஆசை கிடையாது. இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க மாட்டேன் என பிரகாஷ் கூறியிருக்கிறார்.
இதுபோன்று சட்டப்பேரவைக்குள் ஆபாச பட பார்க்கும் விவகாரத்தில் கர்நாடக தலைவர்கள் சிக்குவது இது முதல் முறை அல்ல.
2012ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் சவாடி மற்றொரு எம்எல்ஏ சிசி பாட்டிலுடன் இணைந்து ஆபாச படம் பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடதக்கது.