2024-25 மத்திய பட்ஜெட் : இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - ப.சிதம்பரம்!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
2024-25 மத்திய பட்ஜெட்
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை( 23 ஆம் தேதி) இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது இது ஏழாவது முறையாகும்.மத்திய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக,வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ’’முறைப்படுத்தப்பட்ட துறைகளில் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். மேலும் மாத ஊதியம் ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும். அரசு வழங்கும் தொகை அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் ஆக இருக்கும்.
இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். எனினும் இந்த இளைஞர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பதிவு செய்திருக்க வேண்டும். இவர்களுக்கு 3 தவணை முறைகளில் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
I am glad to know that the Hon'ble FM has read the Congress Manifesto LS 2024 after the election results
— P. Chidambaram (@PChidambaram_IN) July 23, 2024
I am happy she has virtually adopted the Employment-linked incentive (ELI) outlined on page 30 of the Congress Manifesto
I am also happy that she has introduced the…
இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில்,' மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல திட்டங்கள் 2024 025 ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளனர். மேலும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 30 வைத்து பக்கத்தில் இருக்கிறது .
அதில் முதல்மதுரை வேளையில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் வாக்குறுதியில் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.