இப்படியே போனால் பசங்க எதிர்காலம் மோசமாகிடும் ..பள்ளிகளை திறக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!

parliamentary schoolopening
By Irumporai Aug 09, 2021 12:25 AM GMT
Report

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காமல் விட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஓரு வருடத்தை கடந்து விட்டது . இந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் அவர்களை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளதாக  நாடாளுமன் நிலைக்குழு கூறியுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாதது அந்தந்த குடும்பங்களை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு பள்ளிகள் மூடலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டு அவற்றை திறப்பதைக் கூட ஆலோசிக்கலாம் என்றும் சஹஸ்ரபுத்தே தலைமையிலான எம்.பி.க்கள் குழு நாடாளுமன்றத்தில் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, பள்ளிகளை இரு ஷிஃப்டுகளில் பாடங்களை சொல்லித்தருவது, வேறுவேறு நாட்களில் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற பள்ளிகளை திறக்கலாம் என அந்தக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.