தமிழ்நாட்டைப் பற்றி ஏன் அதிகமா பேசுனீங்க...? - ஏன்னா.. நானும் ஒரு தமிழன்... டுவிட்டரில் ட்ரெண்டாகும் ராகுல் வீடியோ

parliament viral video rahul gandhi speech about tamilnadu
By Nandhini Feb 03, 2022 04:58 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைப் பற்றி அதிகமாக பேசியது குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரில் பேசிய ராகுல்காந்தி, ‘உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒருபோதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது’ என்று கடுமையாக பேசினார். ராகுல் காந்தின் இந்த பேச்சுக்கு தமிழக எம்பிக்கள் கைத்தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்து நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியே செல்வதற்காக ராகுல் காந்தி நடந்து சென்றுக் கொண்டிருநதார். அப்போது நிருபர் ஒருவர், ‘நீங்கள் தமிழ்நாட்டை பத்தி அதிகமா பேசறீங்களே ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, ‘நானும் தமிழன் தானே’ என்று ராகுல் காந்தி பதில் கூறினார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.