‘வாழ்நாள் முழுவதும் உங்களால தமிழ்நாட்டை ஆளவே முடியாது... அசைக்கவும் முடியாது..’ - பாராளுமன்றத்தையே தெறிக்க விட்ட ராகுல் காந்தி

parliament rahul gandhi speech about tamilnadu
By Nandhini Feb 03, 2022 04:18 AM GMT
Report

 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்த பட்ஜெட்டிற்கு ஆதரவும், விமர்சனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த பட்ஜெட்டில், நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் , 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் பட்ஜெட் இது என்றும், நாட்டின் பொருளாதாரத்தை இந்த பட்ஜெட் பலப்படுத்துகிறது என்றும், நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்குவதாகவும், எல்லையோர கிராமங்கள் வரை இதன் மூலம் பலம் கிடைக்கும் என்று பேசினார்.

இதனையடுத்து, பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படாத சில கருத்துக்களாக தமது கருத்துக்களை ராகுல் காந்தி முன்வைத்து பேசத் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது -

“மேட் இன் இந்தியா இனி சாத்தியம் கிடையாது. அந்த இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள். சிறு, குறு தொழில்களை ஆதரிக்காமல் மேட் இன் இந்தியா சாத்தியமே கிடையாது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். ஸ்டார்ட்-அப் இந்தியா, மேட் இன் இந்தியா பற்றி நீங்கள் ஒரு பக்கம் பேசிக்கொண்டே போகிறீர்கள்.

இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்கிற ஒரு பார்வையும் உள்ளது. பேச்சு வழக்கில் சொல்ல வேண்டும் என்றால் மாநிலங்கள் அனைத்தும் இணைந்த கூட்டணி தான் இந்தியா. எனவே இந்தியா என்பது ஒற்றை ராஜ்ஜியம் இல்லை. நீங்கள் ராஜாவும் இல்லை.

இதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். மாநில உரிமைகளை எப்படி காக்க வேண்டும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடமிருந்து கற்க வேண்டும். பாஜகவினரை நோக்கி, “வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆளவே முடியாது. அசைக்கவும் முடியவே முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.