பெண் உறுப்பினர் அருகில் ஆபாச படம் பார்த்த எம்.பி. - வெடித்தது சர்ச்சை

By Nandhini Apr 30, 2022 05:15 AM GMT
Report

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் அருகில் இருக்கும்போது ஆபாச படம் பார்த்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. Neil Parish செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், எம்.பி. Neil Parish மனைவி சூசன் பாரிஷ் கூறுகையில், நடந்த சம்பவம் மிகவும் சங்கடமாக எனக்கு இருக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளில் என் கணவர் இதுபோன்ற செயல்களைச் செய்துள்ளது எனக்கு தெரியவே தெரியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால், தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எம்.பி. Neil Parish மறுப்பு தெரிவித்து, உண்மை என்ன என்பது கடவுளுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

பெண் உறுப்பினர் அருகில் ஆபாச படம் பார்த்த எம்.பி. - வெடித்தது சர்ச்சை | Parliament Of The United Kingdom