இன்றுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு!
meeting
cm
stalin
finish
loksabha
By Anupriyamkumaresan
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்த பின் தொடங்கிய முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.
கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுகிறார்.

இது தவிர அரசுத் துறைகளின் செலவினங்களை ஆய்வு செய்து மத்திய அரசின் தணிக்கைத் துறை அளித்த அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கலாக உள்ளது.
கடந்த 21ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
