சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று சென்னை வருகிறார் சுனில் அரோரா!
சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோரா அவர்கள் சென்னை வர இருக்கிறார். ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத்தில் நடைபெறக்கூடிய தமிழகத்தின் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் சின்ஹா அவர்கள் தலைமையில் உயர்மட்ட குழு அதிகாரிகள் கடந்த டிசம்பர் 22, 23ம் தேதிகளில் சென்னைக்கு வந்து சென்றனர்.
அப்போது மாவட்ட கலெக்டர்கள், மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் வருமானத்துறை, அமலாக்க துறை மற்றும் வங்கி அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, இன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு இன்று தமிழகம் வர இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.