அனல் பறக்கப்போகும் 2021 சட்டமன்ற தேர்தல்..129 தொகுதிகளில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தும் திமுக - அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலில் 129 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக காட்சிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக வெளியிட்டது.
அதனையடுத்து திமுகவில் இழுபறி இருந்த நிலையில்,இன்று மதியம் 12.30 மணியளவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக சட்டசபை தேர்தலில் 129 தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி மோதல் ஏற்பட்டு உள்ளது.அதிமுக சார்பில் 3 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
178 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து 187 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. திமுக மட்டும் 173 தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.இதன்படி தி.மு.க., - அ.தி.மு.க., இடையே 129 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
எடப்பாடியில், முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத்குமாரும்,போடியில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்செல்வனும்,கரூரில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து செந்தில்பாலாஜியும்,விழுப்புரத்தில் அமைச்சர் சண்முகத்தை எதிர்த்து லட்சுமணனும்,கோபி செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து மணிமாறனும்,தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து கார்த்திகேய சிவசேனாதிபதியும்,மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவை எதிர்த்து சின்னம்மாளும்,ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து மூர்த்தியும்,ஆவடியில் அமைச்சர் மாபா பாண்டியராஜனை எதிர்த்து நாசரும்,ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து தங்கபாண்டியனும் திமுக சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
14 தொகுதிகளில் பா.ஜ.,வுடன் மோதல்4 தொகுதிகளில் பா.ஜ., திமுக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, திருக்கோவிலூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, மொடக்குறிச்சி, திட்டக்குடி, நாகர்கோவில், ராமநாதபுரம், விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, நெல்லை, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.
4 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ், திமுக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி, சேப்பாக்கம், பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஆற்காடு, பெண்ணாகரம், திருப்பத்தூர், வந்தவாசி, கீழ்ப்பெண்ணாதூர், சங்கராபுரம்,செஞ்சி, மயிலம், மேட்டூர், சேலம் மேற்கு நெய்வேலி, ஆத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் திமுக - பா.ம.க, இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
20 பேருக்கு வாய்ப்பு மறுப்புதிமுக வேட்பாளர் பட்டியலில், தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள 74 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 20 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. புதுக்கோட்டை தொகுதியில் பெரியண்ணன், திருப்பரங்குன்றம் தொகுதியில் சரவணன் உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
10வது முறைதி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 10வது முறையாக அந்த தொகுதியில் துரைமுருகன் களம் இறங்க உள்ளார். 1971 ல் காட்பாடியில் போட்டியிட்ட துரைமுருகன், 1977 மற்றும் 1980களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். பின்னர், 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 என தொடர்ந்து 9 முறை தொடர்ந்து காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
11 முறை தேர்தலில் போட்டியிட்ட துரைமுருகன், 7 முறை காட்பாடியிலும், 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் வென்றுள்ளார். 12 பேர் பெண்கள்பூங்கோதை ஆலடி அருணா, கீதாஜீவன், சின்னம்மாள், தமிழரசி, கயல்விழி செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், சிவகாம சுந்தரி, ஜீவா ஸ்டாலின், ரேகா பிரியதர்ஷினி, சீத்தாபதி சொக்கலிங்கம், வரலட்சுமி மதுசூதனன், அமலு ஆகிய 12 பேர் மட்டுமே திமுக வேட்பாளர் பட்டியலில் பெண் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிடும் முத்துராஜா, பூங்கோதை ஆலடி அருணா, வரதராஜன், மதிவேந்தன், தருண், லட்சுமணன், மாசிலாமணி, பிரபு ராஜசேகர், எழிலன் ஆகிய 9 பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.