பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொன்னகரதில் ஜி.கே.மணி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
பென்னாகரம் - ஜி.கே.மணி
ஆத்தூர் (திண்டுக்கல்) - ம.திலகபாமா
கீழ்பென்னாத்தூர் - மீ.கா.செல்வக்குமார்
திருப்போரூர் - திருக்கச்சூர் கி.ஆறுமுகம்
ஜெயங்கொண்டம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆற்காடு - கே.எல்.இளவழகன்
திருப்பத்தூர் - டி.கே.ராஜா
தருமபுரி - எஸ்.பி.வெங்கடேஸ்வரன்
சேலம் மேற்கு - இரா.அருள்
செஞ்சி - எம்.பி.எஸ்.ராஜேந்திரன்