ஏப்ரல் இறுதியில் தமிழக சட்டமன்ற தேர்தலா?
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது அதற்குள் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை வந்திருந்த தலைமை தேர்தல் ஆணையரிடம் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த அதிமுக, பாஜக கட்சிகள் வலியுறுத்தி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.