1 பார்லே-ஜி பிஸ்கெட் பாக்கெட் ரூ.2342 - என்ன காரணம் தெரியுமா?

Food Shortages Israel Gaza
By Sumathi Jun 07, 2025 06:38 AM GMT
Report

காசாவில் பிஸ்கட்டுகள் சுமார் 500 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

உணவு பஞ்சம்

2023-ஆம் ஆண்டு முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 19ஆம் தேதி காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 436 பேர் கொல்லப்பட்டனர்.

1 பார்லே-ஜி பிஸ்கெட் பாக்கெட் ரூ.2342 - என்ன காரணம் தெரியுமா? | Parle G In A Luxury In Gaza Viral Post By Father

இதனால் காசாவில் உள்ள மக்களுக்கு தற்போது அடிப்படை மருந்துகளும், உணவும் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக குப்பையில் உணவு தேடும் புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை உலுக்கியது.

தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் - ஸ்கெட்ச் போட்ட நாசா!

தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் - ஸ்கெட்ச் போட்ட நாசா!

500 மடங்கு அதிக விலை

இந்நிலையில், இந்தியாவில் ரூ. 5க்கு விற்கப்படும் ஒரு பாக்கெட் பார்லே-ஜி பிஸ்கட் காசாவில் ரூ. 2342 என விற்கப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், பார்லே-ஜி பிஸ்கட்டுகள் 24 யூரோக்களுக்கும் (சுமார் ரூ.2,342) அதிகமாக விற்கப்படுவதாக ஒரு நபர் கூறுகிறார்.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரஃபிஃபுக்கு பிடித்த பிஸ்கட்டுகள் கிடைத்தன. விலை 1.5 யூரோவில் இருந்து 24 யூரோக்களுக்கும் மேலாக உயர்ந்தாலும், ரஃபிஃபுக்கு பிடித்ததை மறுக்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜூன் 6,நிலவரப்படி, வடக்கு காசாவில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை 

1 கிலோ சர்க்கரை: ரூ.4,914, 1 லிட்டர் சமையல் எண்ணெய்: ரூ.4,177, 1 கிலோ உருளைக்கிழங்கு: ரூ.1,965, 1 கிலோ வெங்காயம்: ரூ.4,423, 1 கப் காபி: ரூ.1,800