பரியேறும் பெருமாள் திரைப்பட புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்!
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார்.
பரியேறும் பெருமாள்
நெல்லையை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நாட்டுப்புற கலைஞர். சாதிய ரீதியிலான சமூக அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதில் தனது சிறப்பான நடிப்பின் மூலமாக பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இந்நிலையில் கலைஞர் தங்கராஜ் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தங்கராஜ் மறைவு
அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் உயிரிழந்துள்ளார். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கராஜன் மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு உதவியாக அரச அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணி நியமனம் செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.