எது பாரீஸ் - சென்னைக்கு டைரக்ட் விமானமா? - புதிய விமானம் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி!

flight paris to chennai direct flight
By Anupriyamkumaresan Jun 27, 2021 10:56 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in இந்தியா
Report

பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரீசிலிருந்து சென்னைக்கு ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ்சின் புதிய விமான சேவை தொடங்கியுள்ளது.

எது பாரீஸ் - சென்னைக்கு டைரக்ட் விமானமா? - புதிய விமானம் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி! | Paris To Chennai Flight Direct Passenger Flight

பாரீஸ்சில் உள்ள சாா்லஸ் டி கோலே விமானநிலையத்திலிருந்து நேற்று காலை 10.25 மணிக்கு 111 பயணிகள்,19 விமான ஊழியா்களுடன் புறப்பட்ட ஏா்பிரான்ஸ் போயீங் ரக விமானம் நேற்று நள்ளிரவு 12.25 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தடைந்தது.

எது பாரீஸ் - சென்னைக்கு டைரக்ட் விமானமா? - புதிய விமானம் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி! | Paris To Chennai Flight Direct Passenger Flight

இந்தியா மற்றும் பிரான்ஸ் தேசீய கொடிகளுடன் வந்து தரையிறங்கிய விமானத்தை விமானநிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனா்.விமானிகள்,விமான பணிப்பெண்கள்,விமான பொறியாளா்கள் அனைவருக்கும் மலா்மாலைகள் அணிவித்து,பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்றனா்.

இதனை தொடர்ந்து, விமான ஊழியா்கள் அனைவரும் ஓய்வுக்காக சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனா்.

எது பாரீஸ் - சென்னைக்கு டைரக்ட் விமானமா? - புதிய விமானம் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி! | Paris To Chennai Flight Direct Passenger Flight

நாளை அதிகாலை 1.20 மணிக்கு இந்த விமானம் மீண்டும் சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டு செல்கிறது.இது சென்னை-பாரீஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர புதிய பயணிகள் விமானமாகும்.