இறந்து போன குழந்தையை 3 ஆண்டுகளாக வீட்டில் பதுக்கி வைத்த பெற்றோர் - அதிர்ந்துபோன போலீசார்
தென் கொரியாவில் கியோங்கி எனும் மாகாணத்தில் ஓர் தம்பதி தனது இறந்து போன குழந்தையின் உடலை ஓர் பிளாஸ்டிக் பாத்திரத்தில் மறைத்து வைத்துவிட்டனர்.
உயிரிழந்த குழந்தையை மறைத்து வைத்த பெற்றோர்
பொதுவாக, தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுகராதர பரிசோதனை, குழந்தைகளின் பள்ளிக்கூட சேர்க்கை பற்றிய அடிப்படை ஆய்வு செய்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பின்னர் தான் போலீசாருக்கு கடந்த அக்டோபர் 27அன்று புகார் தெரிவிக்கப்பட்டு, பின்னர் போலீசார் தம்பதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முதற்கட்டமாக, அந்த குழந்தையின் தாயார், குழந்தை தொலைந்து போனதாக தெரிவித்துள்ளார். பின்னர் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியபோது, குழந்தையின் சடலத்தை மறைத்து வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
35 செமீ நீளமும், 24 செமீ அகலமும், 17 செமீ உயரமும் கொண்ட ஒரு கொள்கலனில் இறந்து போன தங்களது குழந்தையின் உடலை மறைத்து வைத்ததை தம்பதியினர் ஒப்புக்கொண்டனர்.
தற்போது குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளியான பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது.