நடு ரோட்டில் காதலர்களை காரில் கடத்த முயன்ற பெற்றோர் - சினிமாவை மிஞ்சிய காட்சிகள்
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்டில் கடத்த முயன்றதால் காதல் ஜோடி கூச்சல் போட்டதை கண்டு சக வாகன ஓட்டிகள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வர் மற்றும் சினேகா. இவர்கள் இருவரும் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் மேஜர் என்பதால் குடும்பத்தினர் தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பெண் வீட்டார் சமரசமாகி விட்டதாக கூறி கோவிலுக்கு செல்லலாம் என கூறி ஏமாற்றி தங்களை எங்கோ கடத்தி செல்வதாகவும், தங்களை பெற்றோர் கொன்று விடுவார்கள் எனவும் கதறினர்.
காரில் கத்தியை கழுத்தில் வைத்து தங்களை மிரட்டியதாகவும், தங்களை காப்பாற்றும் படி போக்குவரத்து போலீசாரின் காலில் விழுந்து கதறினர்.
இதனையடுத்து உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர் காதல் ஜோடியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பெண்ணின் பெற்றோரையும் அவர்கள் வந்த வாகனத்தையும் பந்தய சாலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் கடத்தி சென்று கொலை செய்து விடுவார்கள் என காதல் திருமணம் செய்த தம்பதி நடுரோட்டில் கதறியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
You May Like This