பேரக்குழந்தை பெற்றுத்தராததால் ஆத்திரம் : மகனிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் நீதிமன்றத்தில் புகார்!

Uttarakhand
By Swetha Subash May 13, 2022 07:34 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

வசித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

கடைசி காலத்தில் பேரக்குழைந்தைகளோடு செலவிட ஆசைப்பட்ட பெற்றோர் மகனிடம் இது தொடர்பாக பேசிப் பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் ஓராண்டிற்குள் தங்களுக்கு பேரப்பிள்ளை வேண்டும் இல்லையென்றால் நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாயை தன் மகன் தரவேண்டும் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.

பேரக்குழந்தை பெற்றுத்தராததால் ஆத்திரம் : மகனிடம் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பெற்றோர் நீதிமன்றத்தில் புகார்! | Parents Seek 5 Crore From Son For Grandkids

பெற்றோரின் மனுவில் நியாயமான காரணங்கள் இருப்பதால் இந்த மனு நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

விசாரணைக்கு வரும் நாளில் மகன் மற்றும் மருமகள் இருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரம்:

ஒரே ஒரு மகன் என்பதால் மொத்த வருமானத்தையும் அவரின் படிப்பு செலவுக்கே செலவழித்ததாகவும், மகனை விமானியாக்க வேண்டும் என்று விரும்பி கடந்த 2006-ம் ஆண்டு சுமார் 50 லட்சம் ரூபாய் செலவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பியதாகவும் ஒரே ஆண்டில் அமெரிக்காவில் இருந்து மகன் இந்தியா திரும்பிவிட்டதாகவும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தவரை தாங்கள் தான் பார்த்துக்கொண்டதாகவும் தங்களின் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் விமானியாக பணிபுரிய வேலை கிடைத்துவிட்டதென்றும் ஓய்வு காலத்தில் எங்கள் பேரனுடன் நேரத்தை செலவிடுவோம் என்று ஆசையோடு கடந்த 2016-ம் ஆண்டு மகனுக்குத் திருமணம் செய்துவைத்ததாகவும் ஆனால் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையிலும் இருவரும் இதுவரை குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இருவரும் வேலை காரணமாக இருவேறு இடங்களில் வசித்து வருவது தங்களுக்கு தாங்கமுடியாத வலியைக் கொடுக்கிறது என்றும் குழந்தையை வளர்க்க கடினமாக இருக்கும் என்று சொன்னால், குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம் என்று மகனிடம் தெரிவித்ததாகவும் ஆனால் இருவரும் அதை கேட்கத் தயாராக இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, ஒருவருடத்தில் இருவரும் சேர்ந்து எங்களுக்கு ஒரு பேரப்பிள்ளையைப் பெற்றுக்கொடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் இல்லையென்றால் மகன் படிப்புக்கு செய்த செலவு, 5 ஸ்டார் விடுதியில் செய்த திருமணத்திற்கு ஆன செலவு,

அன்பளிப்பாகக் கொடுத்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றபோது செய்த செலவு ஆகியவற்றையெல்லாம் சேர்த்து 5 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தது அனைத்தையும் மகனுக்காகவே செலவு செய்திருக்கிறோம். இப்போது எங்களிடம் எந்த வருமானமும் இல்லை என்றும் அந்த பெற்றோர் புகார் மனுவில் கூறியிருந்தனர்.