பெற்றோரிடம் அனுமதி கடிதம் கட்டாயம் பெற்றுவர வேண்டும்: தமிழக அரசு

corona government exam
By Jon Feb 09, 2021 02:00 PM GMT
Report

தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் கட்டாயமாக பெற்றோரிடம் அனுமதி கடிதத்தை பெற்று வர வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த வாரம் பிப்ரவரி மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்தது.

அதில், வரும் பிப்.8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படும் என தெரிவித்திருந்தது. கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.