தாலி கட்டிய மாணவர்.. வேலி போட்ட வீடு, சித்திரவதை செய்த சித்தி - தவிப்பில் காதலன்!
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதான மாரீசுவரி, இவர் பிளஸ் 2 படித்துள்ளார். இவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இவர் படிக்கும்போது , தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம், 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளிக்கு ஊருக்கு வந்த இவர் காதலியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது விநாயகர் கோவிலில் வைத்து மாரீசுவரி கழுத்தில் சசிகுமார் தாலி கட்டியிருக்கிறார். பின்னர் அங்கேயே தங்கியுள்ளனர்.
எதிர்ப்பு
இந்நிலையில், தன் காதலியை கொடைகானலில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தென்காசியில் உள்ள தனது சித்தி முனியம்மாள் வீட்டில் காதலியை விட்டுவிட்டு, சசிகுமார் மட்டும் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். காதல் திருமணத்தில் பிரச்சினை ஏற்பட்டால், தனது பாட்டி மூலம் தீர்வு கண்ட பிறகு, காதலியை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
பின்னர், இது குறித்து சசிகுமார் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார், ஆனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உடனே அவரது குடும்பத்தினர் அவரது சித்தியிடம் மாரீசுவரியை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு எச்சரித்துள்ளனர். அதனால் அவரது சித்தி, சசிகுமாரை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு மாரீசுவரியை மிரட்டி கழுத்தில் உள்ள தாலியை பறித்து வீசியதுடன், வீட்டை விட்டு வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.
மாரீசுவரி சோழபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் கதறி நடந்ததை கூறிவிட்டு மருந்தை குடித்துவிட்டார். பின்னர், இவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர், தற்பொழுது தீவிர சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரணை நடத்திய போது தான், சசிமாரின் சித்தி, மாரீஸ்வரியை இளம்பெண்ணை மிரட்டி தாலியை அறுத்து வீசி அவமானப்படுத்தியது தெரியவந்தது, அதனால் அவரை கைது செய்தனர்.