2 வயதுக் குழந்தை நீச்சல் பயிற்சி.. தாய் செய்த விபரீத செயல் - நடுங்க வைத்த பகீர் பின்னணி!

United States of America Crime Death Murder
By Vidhya Senthil Jan 18, 2025 09:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக் கூறி 2 வயதுக் குழந்தையைப் பெற்றோர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவில் வசித்து வந்தவர் டகோடா ஷான் ஹேஸ். இவருக்குத் திருமணமாகி 2 வயதில் ஒரு மகனும் மற்றும் 6 வயது மகளும் உள்ளனர்.இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் அன்னஸ்டாசியா அட்கின்ஸ் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

நீச்சல் கற்றுக் கொடுப்பதாக கூறி பெற்றோர் செய்த விபரீத செயல்!

இந்த நிலையில் கடந்த 2024 ஆண்டு ஜூன் மாதம் நீச்சல் குளத்தில் 2 வயது மகன் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

1 வயது குழந்தை கழுத்து அறுத்துக் கொலை..ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!

1 வயது குழந்தை கழுத்து அறுத்துக் கொலை..ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரம் - பகீர் பின்னணி!

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அமெரிக்கா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது 2 வயதுக் குழந்தையின் சகோதரியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.2 வயதுக் குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

2 வயதுக் குழந்தை

இதற்கு அந்த குழந்தை நீச்சல் அடிப்பதில் தயக்கம் காட்டியுள்ளது.அதனையும் மீறிக் கட்டாயப்படுத்தி நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று பல முறை தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. அட்கின்ஸ் உடல்ரீதியாக 2 வயதுக் குழந்தையைத் தலை, முழங்கால்கள் மற்றும் கால்களில் ஒரு குச்சியால் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறினார்.

நீச்சல் கற்றுக் கொடுப்பதாக கூறி பெற்றோர் செய்த விபரீத செயல்!

இந்த சம்பவத்திற்கு தனது தந்தை டகோடா ஷான் ஹேஸ் உடந்தையாக இருந்தாக சிறுமி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து டகோடா ஷான் ஹேஸ் மற்றும், அட்கின்ஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.