மாணவிகளிடம் ஆசிரியர் அத்துமீறல்; செருப்பால் அடித்த பெற்றோர் - அதிரடி காட்டிய போலீஸ்
Sexual harassment
India
By Thahir
மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை பெற்றோர் செருப்பால் அடித்து தாக்கினர்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பெற்றோர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரின் மீது செருப்புகளை கொண்டு தாக்க தொடங்கினர்.
ஆசிரியரின் தவறான நடத்தை குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளதை அடுத்து பள்ளிக்கூடத்திற்கு வந்த பெற்றோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.