பெற்றோர்களை அடித்து விரட்டிய தனியார் பள்ளி - வெளியான அதிர்ச்சி வீடியோ
கல்வி கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் கோரிக்கை வைக்க சென்ற பெற்றோரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிப்வேவாடி பகுதியில் உள்ள கிளின் மேமொரியல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிலும் பள்ளி மாணவர்களிடம் கல்விக்கட்டணம் செலுத்த சொலுத்த சொல்லி உள்ளது. பெற்றோர்கள் சார்பில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் அல்லது தவணை வேண்டும் எனவும்,
கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு பள்ளிக்கு சென்ற பெற்றோர்களை,பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து வைத்திருந்த பவுன்சர்கள் தாக்கினர்.
அப்போது பெற்றோர் ஒருவரை பெண் பவுசர் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் மங்கேஷ் கெய்க்வாட் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Watch: #Female bouncer beats student's parents in #PuneSchool #PuneSchools #Students #teachers #Parents #Crime @Punenews241 #Punekars #India #Maharashtra pic.twitter.com/VWxiaIibDW
— Free Press Journal (@fpjindia) March 12, 2022