பரந்தூர் விமான நிலையம் : ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

By Irumporai Dec 05, 2022 09:37 AM GMT
Report

விமான நிலையங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம்

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசகர்களை வரவேற்று டிட்கோ விளம்பரம் செய்துள்ளது. சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது தமிழக அரசு.

விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என டிக்கோ நிபந்தனை விதித்துள்ளது. 4,970 ஏக்கர் பரப்பில் புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது. பரந்தூர் விமான நிலையத்துக்காக 13 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் : ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு | Parantur Airport Tamil Nadu Government Tender

டிட்கோ அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான சாலை, ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், விமான நிலையங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் ஜனவரி 6 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து வரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஜனவரி 6-ஆம் திறக்கப்படும் என டிட்கோ அறிவித்துள்ளது.